தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி எனப் பல இந்திய மொழித் திரைப்படங்களில் கொடிகட்டிப் பறந்துவரும் ராஷ்மிகா மந்தனா, உயரிய இத்தாலிய ஆடை விளம்பர நிகழ்ச்சியையும் விட்டுவைக்கவில்லை.
இத்தாலியின் மிலான் நகரில் நடைபெற்ற நவீன ஆடை வாரம் (Milan Fashion Week) நிகழ்ச்சியின் ‘வெர்சாஷே’ அங்கத்தில் பங்கேற்றார் ராஷ்மிகா. ‘திருடிய இதயத்தைத் திருப்பிக்’ கொடுக்குமாறு அவரைக் கேட்டுக்கொண்டனர் ரசிகர்கள்.
கைப்பாகம் இல்லாத கவர்ச்சிகரமான கறுப்பு சட்டை, இந்தக் காலத்தில் பிரபலமாக இருக்கும் ‘கிழிந்த’ ஜீன்ஸ் போன்ற ஆடைகளில் பவனி வந்து ரசிகர்களை வேறு உலகிற்கு அழைத்துச் சென்றார் ‘தளபதி’ விஜய்யின் ‘வாரிசு’ பட நாயகியான ராஷ்மிகா. சட்டைக்கு மேல் அவர் அணிந்திருந்த ‘பிளேஸர்’ அவரின் அழகுக்கு மேலும் மெருகூட்டியது.
கடைசியாக ‘எனிமல்’ இந்திப் படத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக நடித்தார் ராஷ்மிகா. அவரின் ‘புஷ்பா 2’, ‘சாவா’ உள்ளிட்ட படங்கள் இவ்வாண்டு வெளிவரவுள்ளன.

