சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படங்களுக்கான வியாபார எல்லை மளமளவென பெருகியுள்ளது. ‘அமரன்’ படத்தின் வெற்றிதான் இதற்குக் காரணம்.
குறிப்பாக, வெளிநாட்டுச் சந்தையில் சிவகார்த்திகேயனின் அடுத்தடுத்த படங்களுக்கு விநியோகிப்பாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
இதுநாள்வரை ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோரின் படங்களுக்கு மட்டுமே வெளிநாட்டுச் சந்தையில் பெரும் வரவேற்பு கிடைத்து வந்த நிலையில், அந்தப் பட்டியலில் சிவகார்த்திகேயனும் இணைந்துள்ளார்.
இதற்கிடையே, சுதா கொங்கரா இயக்கத்தில் சிவா நடிக்கும் புதிய படத்துக்கு ‘1965’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இதில் நடிகர் ஜெயம் ரவி வில்லனாகவும், ஒரு முக்கிய வேடத்தில் நடிகர் அதர்வாவும் நடிக்கின்றனர்.
இந்தப் படம் 1960களில் நடைபெறும் கதையாக உருவாகிறதாம்.