நட்சத்திரத் தம்பதியரான சூர்யா, ஜோதிகாவின் மகள் தியா, தனது கலைக் குடும்பத்துக்கு மிக இளம் வயதிலேயே பெருமை சேர்த்துள்ளார்.
தற்போது பள்ளியில் படித்துவரும் தியா இயக்கியுள்ள ஆவணப்படத்துக்கு விருது கிடைத்துள்ளது. இது தேர்வுக்காக அவர் இயக்கிய ஆவணப்படமாம்.
‘லீடிங் லைட்’ என்ற தலைப்பில் உருவாகியுள்ள இந்த ஆவணப்படமானது, திரையுலகில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றும் பெண்களை மையமாக வைத்து உருவாகியுள்ளது.
பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் அவற்றை எதிர்கொள்ளத் துணை நிற்கும் அவர்களின் திறமைகளையும் அலசும் படைப்பாம்.
இந்த ஆவணப்படத்துக்காகச் சிறந்த திரைக்கதை ஆசிரியர் விருதைப் பெற்றுள்ளார் தியா. இதனால் பெற்றோர் பூரிப்படைந்துள்ளனர்.
“இதுபோன்ற தரமான ஆவணப்படத்தை உருவாக்கிய என் மகளை நினைத்துப் பெருமைப்படுகிறேன்.
“தொடர்ந்து இதுபோன்ற ஆக்கபூர்வமான வேலைகளில் ஈடுபட அவரை ஊக்குவிப்பேன்,” என்று தெரிவித்துள்ளார் ஜோதிகா.
‘சூர்யாவின் மகள் சோடை போவாரா?’ என்று திரையுலகத்தினரும் தியாவைப் பாராட்டி வருகின்றனர்.