தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நம்பி ஏமாந்துவிடாதீர்கள்; ஸ்‌ரேயா கோஷல் எச்சரிக்கை

1 mins read
21428dd4-9012-4fd4-8372-5b13b3547c2f
ஸ்ரேயா கோஷல். - படம்: இந்திய ஊடகம்

பிரபல பின்னணிப் பாடகி ஸ்ரேயா கோஷலின் எக்ஸ் தளக் கணக்கு, பிப்ரவரி 13ஆம் தேதி முதல் முடக்கப்பட்டது.

இது குறித்து அவர் தமது ரசிகர்களிடம் பகிர்ந்துகொண்டார்.

“எனது எக்ஸ் தளக் கணக்கை மீட்க நான் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. எனது எக்ஸ் தளப் பக்கத்துக்குள் நுழைய முடியாததால் அதை என்னால் நீக்கவும் முடியவில்லை. அந்தக் கணக்கில் இருந்து வரும் எந்த இணைப்பையும் தகவல்களையும் நம்ப வேண்டாம். கணக்கு மீட்கப்பட்டால் தெரிவிப்பேன்,” என்று ஸ்‌ரேயா கூறியிருந்தார்.

இந்நிலையில், தமது எக்ஸ் தளக் கணக்கு மீட்கப்பட்டுவிட்டதாக இப்போது அவர் தெரிவித்துள்ளார்.

“பிப்ரவரி மாதம் ஊடுருவப்பட்ட எனது எக்ஸ் தளக் கணக்கு நீண்ட போராட்டத்துக்குப் பிறகு என் வசம் திரும்பிவிட்டது. மேலும், மிகவும் அபத்தமான தலைப்புகளுடன் கூடிய கட்டுரைகளும் செயற்கை நுண்ணறிவு உருவாக்கிய படங்களுடன் என்னைப் பற்றிய ‘விசித்திரமான விளம்பரங்கள்’ வந்து கொண்டிருக்கின்றன. அதுகுறித்து ரசிகர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அவை மோசடி இணைப்புகளுக்கு வழிவகுக்கலாம். அந்த விளம்பரங்கள் பற்றி எக்ஸ் தளத்துக்குப் புகார் அளியுங்கள். அவற்றை நிறுத்த எனக்கு எந்த அதிகாரமும் இல்லை. என்னால் முடிந்த வரை முயற்சி செய்தேன். விரைவில் எக்ஸ் தளம் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் என்று நம்புகிறேன்” என ஸ்‌ரேயா தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்