தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வாய்ப்பைத் தவற விட்டுவிடாதீர்கள்: சூர்யா

2 mins read
8211f439-2d0e-4e43-902c-90b4e9ced518
‘ரெட்ரோ’ படத்தில் ஒரு காட்சி. - படம்: ஊடகம்
multi-img1 of 2

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ‘ரெட்ரோ’. சூர்யா ஜோடியாக பூஜா நடித்துள்ளார்.

இப்படத்தின் இ்சை, பாடல் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பேசிய சூர்யா, ‘ரெட்ரோ’ எனும் வார்த்தை, நாம் கடந்துவந்த பாதையைக் குறிக்கும் என்றார்.

“சில நாள்களுக்கு முன்பு என்னுடைய ரசிகர்கள் ஏறக்குறைய 3,000 பேரைச் சந்தித்துப் பேசினேன். அப்போது அவர்களைக் கட்டி அரவணைத்து, புகைப்படமும் எடுத்துக்கொண்டேன்.

“எனது வாழ்க்கை அரை நூற்றாண்டை நெருங்குகிறது. ஆனால், வந்தவர்கள் அனைவரும் 20 வயதில் உள்ளவர்கள்தான். என் மீது மிகுந்த அக்கறையுடன் அவர்கள் என்னை நலம் விசாரித்தனர்.

“ரசிகர்களின் அன்பு போதும். நான் எப்போதும் நன்றாக இருப்பேன்.

“வாழ்க்கை மிகவும் அழகானது. அதை நம்புங்கள். வாய்ப்புகள் வரும்போது தவற விட்டுவிடாதீர்கள்.

“ஒவ்வொருவருக்கும் ஒரு நோக்கம் உள்ளது. என் வாழ்க்கைக்கான நோக்கம் அகரம் ஃபவுண்டேஷன்தான். இதன் மூலம் சுமார் 8,000 தம்பி, தங்கைகளை பட்டதாரிகளாக ஆக்க முடிந்தது.

“இந்தத் தருணத்தில் எனது கண்ணாடிப்பூவான ஜோதிகாவுக்கும் நன்றி. அவர் இல்லையென்றால் என்னால் இவ்வளவு தூரம் வந்திருக்க முடியாது,” என நிகழ்ச்சியில் பேசினார் சூர்யா.

இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், தனது தந்தையை மேடையேற்றி கௌரவப்படுத்தினார்.

அப்போது அவரது தந்தை, ஏறக்குறைய நூறு படங்களில் பல்வேறு சிறிய கதாபாத்திரங்களில் நடித்து முடித்திருப்பதாக நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் அறிவித்ததைக் கேட்டு சூர்யாவின் தந்தை சிவகுமார் வியந்துபோனார்.

“நூறு படங்கள் என்றால் அது சாதாரணமல்ல. அவருக்கு என் வாழ்த்துகள். மேலும், திறமையான ஓர் இயக்குநரை தமிழ் சினிமாவுக்கு அளித்ததற்காக என் நன்றி.

“என் மகனை வைத்து படம் இயக்கிய பாலா முதல் வசந்த் வரை அனைவரது பாதம் தொட்டு வணங்குகிறேன்,” என்றார் சிவகுமார்.

குறிப்புச் சொற்கள்