நயன்தாராவைக் காதலிக்கிறீர்களா என்று ரசிகர் கேட்டதற்கு பதிலடி கொடுத்து இருக்கிறார் ஷாருக்கான்.
அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ‘ஜவான்’ படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. சுமார் 1,000 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் கிட்டியது. படத்தின் வெற்றியாலும் அட்லியின் வேலைத் திறமையாலும் கவர்ந்த ஷாருக்கான் மீண்டும் அவருடைய இயக்கத்தில் நடிக்க முடிவெடுத்து இருக்கிறார். மேலும், அந்தப் படத்திற்கு ‘ஜவான்’ குழுவையே மீண்டும் இறக்கலாம் என்ற முடிவிலும் ஷாருக்கான் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிது.
இந்நிலையில் வலைத்தளத்தில் ஷாருக்கானிடம் ரசிகர் ஒருவர், “ஜவான்’ படத்தில் நடித்தபோது நயன்தாராவிடம் காதலில் விழுந்தீர்களா?” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஷாருக்கான், “தயவுசெய்து வாயை மூடுங்கள். நயன்தாரா இரண்டு குழந்தைகளுக்கு தாய்,” என்று பதில் கொடுத்திருக்கிறார். அவரது இந்த பதில் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.