தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எதிர்மறை கருத்துகளைப் பரப்ப வேண்டாம்: கயாது லோகர்

2 mins read
c3af8f2c-bc41-4360-ad25-d1bd5b1d1f74
கயாது லோகர். - படம்: ஊடகம்

திரையுலக விமர்சகர்களிடம் பாராட்டு வாங்குவது என்பது எப்போதுமே குதிரைக்கொம்புதான். இப்படிப்பட்ட ஓர் அனுபவத்தால் இளம் நாயகி கயாது லோகர் வேதனையில் உள்ளாராம்.

பிரதீப் ரங்கநாதன் ஜோடியாக இவர் நடித்து வெளியான ‘டிராகன்’ திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதுவரை மொத்த வசூல் ரூ.100 கோடியைக் கடந்துவிட்டது.

கோடம்பாக்கத்தின் அடுத்த கனவுக்கன்னி இவர்தான் என்கிறார்கள். தற்போது தமிழில் ‘இதயம் முரளி’ என்ற படத்தில் நடிகர் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், இன்ஸ்டகிராமில் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கி வரும் கயாது லோகர், அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களைப் பகிரவும் தவறுவதில்லை.

இதற்கிடையே, தனக்குத் தானே ‘மீம்ஸ்’ போட்டுக்கொண்டு இவர் தன்னை சுயவிளம்பரம் செய்துகொள்வதாக அவரைப் பற்றி சிலர் சமூக ஊடகங்களில் விமர்சித்தனர்.

இந்நிலையில், இது தொடர்பாக கயாது விளக்கம் அளித்துள்ளார்.

“என்னை ஆதரித்தவர்களுடைய அன்புக்கும் ஆதரவுக்கும் எப்போதும் நன்றி. எதிர்மறையான விஷயங்களைப் பரப்ப வேண்டாம்,” என்று தமது பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே, அடுத்து ரவி மோகனும் (ஜெயம் ரவி) அறிமுக இயக்குநர் ஒருவரும் இணையும் படத்தில், கயாது நாயகியாக ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

“இவ்வாறு யாரையும் ஏமாற்றவோ திசை திருப்ப வேண்டிய அவசியமோ எனக்கு ஏற்படவில்லை. மலிவான விளம்பரங்களில் எனக்கு விருப்பமோ நம்பிக்கையோ இல்லை,” எனவும் கயாது திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

24 வயதான இவருக்கு வணிகத்துறையில் பட்டப்படிப்பை மேற்கொண்டதால், அத்துறையில் ஏதாவது புதுமையாகச் சாதிக்க வேண்டும் என்கிற ஆசையும் தமக்கு இருப்பதாகச் சொல்கிறார்.

குறிப்புச் சொற்கள்