தாம் நடித்த படங்கள் வெற்றி பெறுவதற்கு அதிர்ஷ்டம் மட்டுமே காரணம் அல்ல என்கிறார் கிரித்தி ஷெட்டி.
அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.
‘திரையுலகில் உங்கள் ஆசை என்ன?’ என்ற கேள்விக்கு, “அனைத்து கதாநாயகர்களுடனும் நடித்துவிட வேண்டும்,” என்றார் கிரித்தி.
அப்போதுதான் மனத்தில் உள்ள பயமும் பதற்றமும் குறையுமாம். அதிர்ஷ்டம் குறித்த ஒரு கேள்விக்கும் அவர் பதில் அளித்துள்ளார்.
“அதிர்ஷ்டம் சில நேரங்களில் கைகொடுக்கலாம். ஆனால், எப்போது நம்மைக் கைவிடும் என்பது தெரியாது. எனவே, ஒரு படம் தோல்வி அடைந்தால் அதிர்ஷ்டத்தின் மீது பழிபோடக் கூடாது.
“மாறாக, நாம் மேலும் என்ன செய்திருந்தால் இந்தத் தோல்வியைத் தவிர்த்திருக்கலாம் என்று யோசிப்பதே வெற்றிக்கான சிறந்த வழி,” என்று கூறியுள்ளார் கிரித்தி ஷெட்டி.

