‘நாடோடிகள்’ படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகிற்கு அறிமுகமானவர் அபிநயா. இவர் ‘ஈசன்’, ‘ஜீனியஸ்’, ‘வீரம்’, ‘பூஜை’, ‘தாக்க தாக்க’, ‘விழித்திரு’, ‘மார்க் ஆண்டனி’ என பல படங்களில் வரிசையாக நடித்தவர். பிறவியிலேயே காது கேளாத, வாய் பேச முடியாத இவர், தனது விடாமுயற்சியால் திரையுலகில் பிரபல நடிகையாக திகழ்கிறார். தனது காதலருடன் கடந்த 15 ஆண்டுகளாக நல்ல நட்புறவில் இருப்பதாக அபிநயா தனது சமூக ஊடகப் பதிவில் கூறியுள்ளார்.
தனது சிறு வயது நண்பரை அவர் காதலிப்பதாகவும் இனிமேல் என்னை எந்த ஒரு நடிகருடனும் இணைத்துப்பேச வேண்டாமெனவும் அந்தப் பதிவில் அபிநயா கூறியுள்ளார்.
கூடிய விரைவில் அபிநயாவின் திருமணம் பற்றிய செய்தி வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்குமுன் விஷாலுடன் இணைத்து இவர் பேசப்பட்டார். அண்மையில், மலையாளத்தில் ‘பணி’ என்ற படத்தில் அபிநயா நடித்தார். ஓடிடியில் வெளியாகி படமும் வெற்றி பெற்றுள்ளது.