இணையத்தில் தன்னை மோசமாக விமர்சனம் செய்தவர்களுக்குப் பதிலடி தந்துள்ளார் நடிகை திரிஷா.
முன்னதாக, விஜய்யின் 50வது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்துத் திரிஷா வெளியிட்ட பதிவு பலரின் விமர்சனத்துக்கு உள்ளானது.
விஜய்யின் பிறந்தநாளில் இரவு 10 மணிக்குமேல் வாழ்த்து தெரிவித்திருந்தார் திரிஷா.
தனது செல்ல நாய்க்குட்டி இஸ்ஸியை விஜய் தூக்கிவைத்துள்ள படத்துடன் வாழ்த்துச் செய்தியை அவர் பதிவிட்டிருந்தார்.
தான் தனித்துத் தெரியவேண்டும் என்பதற்காகவே திரிஷா இவ்வாறு பதிவிட்டதாகப் பலரும் கருத்துரைத்தனர்.
கடந்த 25 ஆண்டுகளாகத் திரையுலகில் பவனிவருகிறார் திரிஷா. முதன்முதலில் ‘கில்லி’ படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்தார். கடைசியாக இவர்கள் இணைந்து நடித்த படம் ‘லியோ’. ‘கோட்’ படத்தில் இணைந்து ஒரு பாடலுக்கு நடனமாடினார்கள்.
பொதுவாக அவர் தொடர்பில் சர்ச்சைகள் ஏதும் இருக்காது என்றாலும் திரிஷாவை விஜய்யுடன் இணைத்து மோசமாகச் சில விமர்சனங்கள் எழுந்ததுண்டு.
அதேபோல் விஜய்யை விமர்சிக்க நினைப்பவர்கள் திரிஷாவுடன் அவரை இணைத்துப் பேசுவதுண்டு.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், விஜய்க்குப் பிறந்தநாள் வாழ்த்து கூறிய பதிவுக்கு விமர்சனம் செய்தவர்களுக்குத் தனது மற்றொரு பதிவின் மூலம் பதிலடி தந்துள்ளார் திரிஷா.
“நீங்கள் அன்பால் நிறைந்திருக்கும்போது, அது அசிங்கமான எண்ணம் கொண்ட மக்களைக் குழப்புகிறது,” என்று அவர் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு இணையவாசிகள் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.