தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையான திரிஷாவின் தனிப்பட்ட விஷயங்களில் மூக்கை நுழைப்பது தவறு என நடிகை சஞ்சனா கல்ராணி தெரிவித்துள்ளார்.
அண்மைகாலமாக திரிஷாமீதான விமர்சனங்கள் பேரளவில் அதிகரித்துவரும் நிலையில், சஞ்சனா கல்ராணி அவருக்கு ஆதரவாகப் பேசியுள்ளார்.
திரிஷா, பல்வேறு சர்ச்சைகளுக்கும் பெயர் போனவர் எனக் கூறப்படுகிறது.
எனினும், தன்மீதான விமர்சனங்களைக் கண்டுகொள்ளாமல் மனதுக்குப் பட்டதைச் செய்து வருகிறார்.
இந்நிலையில், திரிஷாவைக் குறிவைத்து விமர்சிப்பது தவறு என்று பாலிவுட் நடிகையான சஞ்சனா கல்ராணி வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
நடிகை சஞ்சனா கல்ராணி நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி ஆவார்.
அண்மைகாலமாக திரிஷாவைக் குறிவைத்து பலரும் விமர்சிப்பதாக வருத்தம் தெரிவித்த சஞ்சனா, “ஒரு பெண்ணைப் பற்றி பலரும் தங்கள் கற்பனைக்கு ஏற்ப விமர்சிப்பது வேதனை அளிக்கிறது,” என்று தமது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
“யூகங்கள் அடிப்படையில் ஒரு நடிகையை விமர்சிப்பது பெரும் தவறு,” எனச் சுட்டிக்காட்டிய சஞ்சனா, திரிஷாவின் தனிப்பட்ட விஷயங்களில் அடுத்தவர் தமது மூக்கை நுழைப்பதும் தவறு என்றார்.
“தமக்குப் பிடித்ததைப் பேச, செய்ய உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு.
“இதில் திரிஷா ஒன்றும் விதிவிலக்கல்ல. எனவே ஒரு நடிகையாக, ஒரு பெண்ணாக அவரை மதியுங்கள்,” என சஞ்சனா கேட்டுக்கொண்டார்.
அவரது இந்த மனம்திறந்த கருத்துகள் தற்போது இணையத்தில் பரவி வருகின்றன.


