நடிகை பிரியங்கா அருள்மோகன் கடும் மன உளைச்சலிலும் வேதனையிலும் உள்ளார்.
தன்னைத் தவறாகச் சித்திரித்து சமூக ஊடகங்கள் வழி வெளியாகும் தகவல்களும் புகைப்படங்களும்தான் அவரது வருத்தத்துக்குக் காரணம்.
இந்நிலையில்’ ‘ஏஐ’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட சில புகைப்படங்கள் பிரியங்கா மோகனின் படங்கள் எனக் குறிப்பிடப்பட்டு சமூக ஊடங்களில் பரவிக் கொண்டிருக்கின்றன. அவை போலிப் படங்கள் என பிரியங்கா கூறியுள்ளார்.
“என்னைத் தவறாகச் சித்திரிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட படங்கள் பரவி வருகின்றன. தயவுசெய்து அந்தப் போலி புகைப்படங்களைப் பிறருடன் பகிர்வதை நிறுத்துங்கள்.
“நவீன தொழில்நுட்பங்களைப் படைப்பாற்றலுக்குப் பயன்படுத்தப்பட வேண்டுமே தவிர தவறான செயல்களுக்கு அல்ல. நாம் என்ன உருவாக்குகிறோம், எதைப் பகிர்கிறோம் என்பதில் கவனமாக இருப்போம்,” என்று தனது சமூக ஊடகப்பதிவில் வலியுறுத்தியுள்ளார் பிரியங்கா.