பொங்கலுக்கு மண்ணின் வரலாற்றை விளக்க வருகிறது ‘திரவுபதி 2’

1 mins read
e4db2f05-4d8d-4e0f-b3cc-c4b4e58da5fc
‘திரவுபதி 2’ படத்தில் ரிச்சர்ட் ரிஷி. - படம்: சமயம்

மோகன் ஜி இயக்கத்தில் 2020ஆம் ஆண்டு வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்திய ‘திரவுபதி’ படத்தின் இரண்டாம் பாகமான ‘திரவுபதி 2’, எதிர்வரும் பொங்கல் பண்டிகையன்று வெளியாகிறது.

இப்படத்தில் ரிச்சர்ட் ரிஷி, நட்டி நடராஜ், ரக் ஷனா இந்துசுதன், ஒய்.ஜி.மகேந்திரன், சரவண சுப்பையா ஆகியோர் நடித்துள்ளனர்.

ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தை நேதாஜி புரொடக்‌ஷன்ஸ், சோழ சக்ரவர்த்தி, ஜி.எம்.ஃபிலிம் கார்ப்பரேஷன் இணைந்து தயாரித்துள்ளன.

இப்படம் முதலில் ஜனவரி 23ஆம் தேதி வெளியாகத் திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது இது பொங்கல் வெளியீடாக மாற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்துப் பதிவிட்டுள்ள மோகன் ஜி, “இது நமது மண்ணின் வரலாறு. மூன்றாவது வீர வல்லாள மகாராஜாவும் வீர சிம்ம காடவராயரும் வெள்ளித்திரையில் ஒன்றாக வருகிறார்கள்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாநடிகர்