பொங்கல் திருநாளன்று யுவன் கிருஷ்ணா நடித்த ‘ஜாக்கி’, ஜீவா நடித்த ‘தலைவர் தம்பி தலைமையில்’, ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் உருவான ‘திரௌபதி 2’ ஆகிய படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டன.
இந்நிலையில், போதிய திரையரங்குகள் கிடைக்காததால், ‘ஜாக்கி’, ‘திரௌபதி 2’ ஆகியவற்றின் வெளியீட்டுத் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
கார்த்தியின் ‘வா வாத்தியார்’ படத்திற்கும் ஜீவாவின் படத்திற்கும் கூடுதல் திரையரங்குகள் கிடைத்ததால் அப்படங்களுக்குக் குறைந்த திரையரங்குகளே கிடைத்துள்ளன. அதன்காரணமாகப் பட வெளியீட்டைத் தள்ளி வைத்துள்ளனர்.

