கன்னடத் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரும், இயக்குநருமான உபேந்திரா ராவ் ரஜினிகாந்துடன் ‘கூலி’ படத்தில் நடித்து வருகிறார்.
“ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்ற என்னுடைய நீண்ட நாள் கனவு நனவாகியுள்ளது. அவர் எனக்கு ஒரு துரோணாச்சாரியார் போன்றவர். அவரது பேச்சு, நடிப்புக்கு மட்டுமல்ல, வாழ்க்கைக்கும் ஒரு உத்வேகம் தரக்கூடியது.
“நான் என்னை ரஜினியின் சீடனாகக் கருதுகிறேன். அவருடன் இணைந்து நடித்தது அற்புதமான அனுபவம்,” என்று உபேந்திரா ராவ் தெரிவித்தார்.
தற்போது உபேந்திரா நடித்துள்ள ‘யு.ஐ.’ படம் வெளியாகியுள்ளது. கன்னடத்தில் உருவான இந்தப் படம் தமிழ், தெலுங்கிலும் வெளியாகி உள்ளது. இப்படம் ரூ.100 கோடி செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது.