திரிஷ்யம் 3: ரசிகர்கள் ஏமாற்றம்

திரிஷ்யம் 3: ரசிகர்கள் ஏமாற்றம்

1 mins read
481f92b1-277e-4351-bb89-22fc3c516b05
‘திரிஷ்யம் 3’ படத்தில் மோகன்லால், மீனா மற்றும் பலர் நடித்துள்ளனர். - படம்: திரிஷ்யம் படக்குழு

ஜீத்து ஜோசப் இயக்கத்தில், மோகன்லால், மீனா மற்றும் பலர் நடித்துள்ள ‘திரிஷ்யம் 3’ படம் வியாழக்கிழமை (மே 21) வெளியாகி உள்ளது.

கேரளாவில் மட்டும் கிட்டத்தட்ட 500 திரையரங்குகளில் இப்படம் வெளியாகி உள்ளதாக படத்தின் நாயகன் மோகன்லால் பெருமையுடன் சமூக ஊடகத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், படத்தின் முதல் காட்சியைப் பார்த்ததுமே ரசிகர்கள் தவிக்க ஆரம்பித்து விட்டார்கள். சமூக ஊடகங்களில் படம் பற்றிய விமர்சனங்களையும் அவர்கள் எழுதிவருகின்றனர்.

படம் பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. படத்தின் கடைசி 15 நிமிடங்கள் தவிர திரைக்கதையில் எந்தவிதமான பரபரப்பும் இல்லை என்கிறார்கள் ரசிகர்கள்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படத்திற்கு இப்படியான விமர்சனங்கள் வர ஆரம்பித்துள்ளது அதிர்ச்சி அளித்துள்ளது.

‘திரிஷ்யம் 1’, ‘திரிஷ்யம் 2’ படங்கள் இந்திய அளவில் மாபெரும் வெற்றி பெற்ற படங்களாகும்.

மோகன்லால், மம்மூட்டி, பகத் ஃபாசில், நயன்தாரா மற்றும் பலர் நடித்த ‘பேட்ரியாட்’ படம் மே 1ல் வெளியாகி படுதோல்வியைச் சந்தித்தது.

அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் அடுத்த அதிர்ச்சியா என மலையாள ரசிகர்கள், குறிப்பாக மோகன்லால் ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்