தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தீபாவளிக்கு ‘டியூட்’ உறுதி: ‘லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி’ டிசம்பருக்கு தள்ளிவைப்பு

1 mins read
d46ce2e9-de6f-479c-a3d5-0512a448aa89
பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கும் ‘டியூட்’ படத்தின் காட்சி. - படம்: இந்திய ஊடகம்

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியாக இருந்த இரண்டு படங்களில் ‘லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி’ டிசம்பருக்கு ஒத்தி வைக்கப்பட்டு தீபாவளிக்கு ‘டியூட்’ மட்டும் வெளியாக இருக்கிறது.

2025 தீபாவளிக்கு ‘பைசன்’, ‘கார்மேனி செல்வம்’, ‘டீசல்’, ‘கம்பி கட்ன கதை’, ‘லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி’, ‘டியூட்’ ஆகிய படங்கள் வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றில், ‘லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி’, ‘டியூட்’ ஆகிய படங்களில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இரண்டு படங்களுமே தீபாவளிக்கு வெளியாகுமா அல்லது இரண்டில் ஒன்று தள்ளிப் போகுமா என்ற சந்தேகம் இருந்து வந்தது. இந்நிலையில் ‘டியூட்’ படம் தீபாவளிக்கு வருவது உறுதி செய்யும் விதத்தில் படத்தின் விளம்பர வேலைகளை தற்போது ஆரம்பித்துள்ளார்கள்.

‘டியூட்’ படத்தின் இயக்குநர் கீர்த்திஸ்வரன் பத்திரிகையாளர்களைச் சந்தித்த போது அவரிடம் இரண்டு பிரதீப் படங்களின் மோதல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு தங்களது படம் வருவது உறுதி என்றார் கீர்த்திஸ்வரன்.

‘லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி’ படத்தை டிசம்பர் மாதத்திற்கு தள்ளி வைக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாநடிகர்