விஷாலுடன் இணைந்து நடிக்கும் துஷாரா

விஷாலுடன் இணைந்து நடிக்கும் துஷாரா

படம்: ஊடகம்

02 Apr 2025 - 3:40 pm

1 mins read

‘வீர தீர சூரன் 2’ படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இதையடுத்து, அப்படத்தின் நாயகி துஷாரா விஜயனுக்கு பல புது வாய்ப்புகள் தேடி வருகின்றன.

துஷாரா அடுத்து நடிகர் விஷாலுடன் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

துஷாரா விஜயன், விஷால் கூட்டணியில் உருவாக உள்ள படத்தை ‘ஈட்டி’ பட இயக்குநர் ரவி அரசு இயக்கப்போவதாகக் கூறப்படுகிறது.

இப்படத்தை விஷால் தனது நிறுவனத்தின் மூலம் தயாரிக்க உள்ளதாகவும் இம்மாத இறுதியில் படப்பிடிப்புப் பணிகள் தொடங்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஷால் படங்களுக்கே உரிய சண்டைக் காட்சிகளும் அதிரடி திருப்பங்களும் கொண்ட படமாக இது உருவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
நடிகைநடிகர்திரைப்படம்இயக்குநர்