தமிழில் ‘காதலிக்க நேரமில்லை’, ‘ஜீனி’ ஆகிய படங்களில் நடித்து வரும் ஜெயம் ரவி, அடுத்து தனது 34வது படத்தில் நடிக்கிறார். தற்காலிகமாக இப்படத்துக்கு ‘ஜெ.ஆர் 34’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
‘ஸ்கிரீன் சீன் மீடியா’ சார்பில் சுந்தர் ஆறுமுகம் இப்படத்தைத் தயாரிக்கிறார். கவின் நடிப்பில் வெளியான ‘டாடா’ என்ற படத்தை இயக்கியிருந்த கணேஷ் கே.பாபு, இப்படத்தை இயக்குகிறார்.
‘பிரதர்’ என்ற படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஜெயம் ரவி நடிக்கும் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். இயக்குநர் எம்.ரத்னகுமார் திரைக்கதை எழுதுகிறார். முக்கிய வேடங்களில் சக்திவேல் வாசு, காயத்ரி, பிரதீப் ஆண்டனி நடிக்கின்றனர்.
நாயகியாக தவ்தி ஜிவால் நடிக்கிறார். இவர், தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவாலின் மகள். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது.