‘லியோ’ சாதனையை முறியடித்த ‘எம்புரான்’

1 mins read
3d891326-6e05-414a-bbdc-0bafb7d53896
 இந்திய அளவில் திரைப்படத்திற்கான நுழைவுச்சீட்டு முன்பதிவில் ‘எம்புரான்’ சாதனைப் படைத்துள்ளது. - படங்கள்: ஊடகம்

ஸ்ரீ கோகுலம் மூவிஸ், லைகா நிறுவனம், ஆசிர்வாத் சினிமாஸ் ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள மலையாளப் படம் ‘எம்புரான்’. அப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற ‘லூசிஃபர்’ படத்தின் 2-ம் பாகம்.

அதில் மோகன்லால், பிருத்விராஜ், மஞ்சு வாரியர், டோவினோ தாமஸ், இந்திரஜித் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்திய அளவில் திரைப்படத்திற்கான நுழைவுச்சீட்டு முன்பதிவில் ‘எம்புரான்’ சாதனைப் படைத்துள்ளது.

அப்படத்திற்கான முன்பதிவு மார்ச் 21ஆம் தேதி தொடங்கப்பட்டது. ஒரே நேரத்தில் அனைத்து மாநிலங்களிலும் தொடங்கியதால், ‘புக் மை ஷோ’ தளத்தில் ரசிகர்கள் குவிந்தனர்.

குறிப்பாக, கேரளாவில் முன்பதிவு தொடங்கிய சிறிது நேரத்தில் அனைத்து நுழைவுச்சீட்டுகளும் விற்றுத்தீர்ந்தன.

மேலும், ‘புக் மை ஷோ’ தளத்தில் ஒரு மணி நேரத்தில் 96.14 ஆயிரம் நுழைவுச்சீட்டுகள் விற்கப்பட்டன. இந்தியாவில், அச்சாதனை படைத்த முதல் படம் ‘எம்புரான்’ தான்.

இதற்கு முன்பு ‘லியோ’ படத்துக்கு 82,000 நுழைவுச்சீட்டுகள் விற்பனையானது தான் சாதனையாக இருந்தது. தற்போது அதை ‘எம்புரான்’ முறியடித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்