நடிகை ராஷ்மிகா மந்தனா தனது நிச்சயதார்த்தம் தொடர்பான வதந்திகளுக்குப் பதிலளித்துள்ளார்.
தம்மா படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் இது குறித்து அவரிடம் கேட்கப்பட்டது.
அதற்கு அவர், குழப்பத்துடனும் வெட்கத்துடனும் பேசியது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
நடிகை ராஷ்மிகா மந்தனாவும் நடிகர் விஜய் தேவரகொண்டாவும் நீண்ட நாள்களாக காதலித்து வருவதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் இருவரும் எங்கும் இது பற்றி அதிகாரபூர்வமாக பதிவிடவில்லை.
அண்மையில் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றதாகக் கூறப்பட்டது. இந்த நிலையில், தம்மா படத்தின் நேர்காணல் ஒன்றில் இது குறித்து ராஷ்மிகாவிடம் கேட்கப்பட்டது.
அந்தக் கேள்விக்கு ராஷ்மிகா குழப்பத்துடன் பதிலளித்தார்.
பின்னர், வெட்கப்பட்டுக்கொண்டே பேசிய அவர், இல்லை, இல்லை. உண்மையில் நிறைய இருக்கின்றன. ஏனெனில் அவ்வளவு விஷயங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. இருப்பினும் எல்லாவற்றின் சார்பாகவும் உங்களது வாழ்த்துகளை எடுத்துக்கொள்கிறேன்,” என்றார்.
தொடர்புடைய செய்திகள்
அண்மைய காணொளியில் அவரது கையில் மோதிரம் இருந்ததும் கவனம் பெற்றது.
சூப்பர் ஹீரோ கதையாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா நாயகனாகவும் ராஷ்மிகா மந்தனா நாயகியாகவும் நடித்துள்ளார்கள்.
தினேஷ் விஜயன், அமர் கௌசிக் தயாரிப்பில் உருவாகியுள்ள தம்மா படத்தினை ஆதித்யா சர்போட்கர் இயக்கி வருகிறார்.
இந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு வரும் அக்டோபர் 21ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.