எஸ்யு அருண்குமார் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், விக்ரம், துஷாரா விஜயன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘வீர தீர சூரன்’. இப்படம் அடுத்த மாதம் பொங்கலுக்குப் பிறகு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்திற்கான வியாபாரம் இப்போதே ஆரம்பித்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதாம். இப்படத்திற்கான முன்னோட்டக் காட்சிதான் அதற்குக் காரணம் என்கிறார்கள். பரபரப்பான சண்டைப் படமாக இந்தப் படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தின் ஓடிடி மற்றும் தொலைக்காட்சி உரிமம் மட்டுமே ரூ.60 கோடிக்கு விற்பனையாகி உள்ளதாம். தமிழகத் திரையரங்குகளின் உரிமை ரூ.20 கோடிக்கு நடந்துள்ளதாம்.
மற்ற மாநிலங்கள், வெளிநாட்டு உரிமை ஆகியவற்றிற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அவையும் ரூ.20 கோடிக்கும் அதிகமாகவே விற்பனையாகும். இப்போதே இந்தப் படத்திற்கு ரூ.100 கோடிக்கான வியாபாரம் உறுதியாகி உள்ளது. இதன் மூலம் தயாரிப்பாளர் படத்தின் செலவிற்கு மேலாக எடுத்துவிட்டார் என்று கூறப்படுகிறது.