நடிகை ஹன்சிகா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தபின்னர், அங்குள்ள உணவகத்தில் பில்டர் காபியுடன் இட்லி, தோசை சாப்பிடுவதைக் காணொளியாக வெளியிட்டுள்ளார்.
அதில், “மும்பையில் பிறந்திருந்தாலும் நானும் தமிழ்ப் பெண்தான், நம்ம ஊர் சாப்பாடு பிரமாதம்,” என்று சமூக ஊடகத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார். இப்பதிவு தற்போது இணையத்தில் பரவி வருகிறது.
நடிகை திரிஷா உள்ளிட்ட இரண்டு லட்சம் பேர் ஹன்சிகாவின் பதிவை ‘லைக்’ செய்துள்ளனர்.
தனுஷ் நடித்த ‘மாப்பிள்ளை’ படம் மூலம் அறிமுகமான நடிகை ஹன்சிகா, தற்போது ‘ரவுடி பேபி’, ‘காந்தாரி’ உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார்.
இன்ஸ்டகிராமில் ஏழு மில்லியன் பேர் இவரைப் பின்தொடர்ந்து வருகின்றனர். அவ்வப்போது, தனது கவர்ச்சியான புகைப்படங்களையும் குடும்பப் புகைப்படங்களையும் ஹன்சிகா பதிவேற்றி வருகிறார்.