தாம் ரஜினியின தீவிர ரசிகை என்றும் அவர் பலருக்கு முன்மாதிரியாக உள்ளார் என்றும் கூறியுள்ளார் நடிகை சிம்ரன்.
அண்மையில் ‘கூலி’ படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்பைப் பார்த்து ரசித்ததாகவும் அந்தப் படத்தைக் கண்டிப்பாக முதல் நாளன்றே பார்க்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
“ரஜினி எங்கும், எப்போதும் எளிமையைக் கடைப்பிடிக்கிறார்.
“‘பேட்ட’ படத்தின் படப்பிடிப்பின்போது, என்னுடைய காட்சி படமாக்கப்பட்டதும் அங்கிருந்து போக மாட்டேன். ஏதேனும் ஒரு மூளையில் அமர்ந்து ரஜினி நடிப்பதைப் பார்த்துக் கொண்டிருப்பேன்.
“அவருடன் பணியாற்றியது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது.
“ஆண்கள், பெண்கள் என அனைவருக்கும் அவர் சிறந்த முன்மாதிரி. தற்போது வாழ்ந்துகொண்டிருக்கும் சாதனையாளர் அவர்.
“‘கூலி’ படம் வெற்றி பெற வாழ்த்துகள்,” என்று அண்மையில் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் பேசும்போது சிம்ரன் கூறியுள்ளார்.