திரையுலகில் ஒரு பாட்டுக்கு நடனமாடும் நடனக் கலைஞராக அறிமுகமான பிரபுதேவா. பிற்காலத்தில் நடன அமைப்பாளராகப் பணியாற்றி வந்தார். கதாநாயகனாகிய பின்னர் போக்கிரி, வில்லு, எங்கேயும் காதல், வெடி என பல படங்களை இயக்கினார். தற்போது விஜய்யின் கோட் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில், பிரபுதேவா அளித்துள்ள நேர்காணல் ஒன்றில்,” என்னுடைய பிள்ளைகளிடம் நான் அதிகமான பாசம் வைத்திருக்கிறேன். ஆனால், அதுபோன்ற தவற்றை யாரும் செய்யாதீர்கள். காரணம் பிள்ளைகள் மீது அளவுக்கு அதிகமான பாசம் வைத்தால் அதன் பிறகு அவர்களுக்கு ஒரு சின்ன பிரச்சினை ஏற்பட்டால் கூட அதை நம்மால் தாங்கிக் கொள்ளவே முடியாது,” என்றார்.
“குறிப்பாக, அவர்களை நன்றாக படிக்க வைத்து பெரிய ஆளாக்க வேண்டும் என்று எந்நேரமும் அவர்களைப் பற்றி மட்டுமே யோசித்துக் கொண்டே இருப்போம். இதனால் நம்முடைய வாழ்க்கையை நம்மால் நிறைவாக வாழ முடியாது. அதனால் தான் பிள்ளைகள் மீது அதிகப்படியான பாசம் வைக்க வேண்டாம் எனக் கூறுகிறேன்,” என்று பிரபு தேவா தெரிவித்துள்ளார்.