‘வாரணாசி’ படப் பாடல்கள் தயார்: கீரவாணி

‘வாரணாசி’ படப் பாடல்கள் தயார்: கீரவாணி

1 of 2
படம்: டைம்ஸ் ஆஃப் இந்தியா
படம்: தி ஹாலிவுட் ரிப்போர்டர்

20 Feb 2026 - 5:16 pm

1 mins read

’பாகுபலி’ புகழ் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகும் அடுத்த திரைப்படைப்பு ‘வாரணாசி’.

தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு நாயகனாக நடிக்கும் இப்படத்தின் 50 விழுக்காடு படப்பிடிப்பு முடிந்துவிட்டதாம்.

இந்தப் படத்துக்கு கீரவாணி இசையமைத்துள்ளார். கடந்த 2001ஆம் ஆண்டு ‘ஸ்டூடண்ட் நம்பர் 1’ என்ற படத்தில் இயக்குநராக அறிமுகமானது முதல் ராஜமௌலியின் படங்களுக்கு கீரவாணிதான் இசையமைத்து வருகிறார்.

‘மகதீரா’, ‘ஈகா’, ‘பாகுபலி’, ‘ஆர்ஆர்ஆர்’ ஆகிய படங்களையடுத்து, ‘வாரணாசி’க்கும் இசையமைக்கிறார் கீரவாணி.

‘வாரணாசி’ படத்துக்கான பாடலுக்கு எப்போதோ மெட்டமைத்து பாடல்களையும் பதிவு செய்துவிட்டனராம். மிக விரைவில் இப்படத்துக்கான பின்னணி இசைப்பணிகள் தொடங்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம், முன்பே திட்டமிட்டபடி ‘வாரணாசி’ படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் முடிவடையும் என்றும் ஏற்கெனவே அறிவித்தபடி அடுத்த ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி இப்படம் திரைகாணும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
திரைப்படம்இயக்குநர்இசையமைப்பாளர்‘நடிகர்