சிவகார்த்திகேயன் தான் நடித்த ‘அமரன்’ படத்திற்கு இசையமைத்த ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு விலையுயர்ந்த கைக்கடிகாரத்தைப் பரிசாக அளித்தார்.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடிப்பில் திரைக்கு வந்துள்ள படம் ‘அமரன்’. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தைப் பெற்று வருகிறது.
மேலும் ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசையும் இந்தப் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது எனலாம். இதன் காரணமாக வலைத்தளங்களில் ஜி.வி. பிரகாஷ்க்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில், ‘அமரன்’ பட நாயகனான சிவகார்த்திகேயன், ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு ஒன்றரை லட்சம் மதிப்புள்ள ஒரு விலையுயர்ந்த கைக்கடிகாரத்தைப் பரிசாக வழங்கியிருக்கிறார்.
இதுகுறித்த தகவலை தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார் ஜி. வி. பிரகாஷ் குமார். இதே போல்தான் ‘விக்ரம்’ படம் வெற்றிபெற்ற போதும் சூர்யாவுக்கு ‘ரோலக்ஸ்’ கடிகாரம் ஒன்றை கமல்ஹாசன் பரிசாக அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.