சிறந்த நடிகர் என்று ரஜினி, கமல் உட்பட பலரிடம் பாராட்டுகளைப் பெற்றபோதிலும், ஃபகத் ஃபாசிலுக்கு மனத்தில் ஒரு வருத்தம் இருக்கத்தான் செய்கிறது.
இன்னும் ஒரு தமிழ்ப் படத்தில்கூட கதாநாயகனாக நடிக்கவில்லை என்பதுதான் அந்த வருத்தமாம். அவரது நல்ல நேரம், ‘96’ பட இயக்குநர் பிரேம் குமார் அந்த மனக்குறையைப் போக்கியுள்ளார்.
அவர் இயக்கும் அடுத்த தமிழ்ப் படத்தில் ஃபகத்தான் கதாநாயகன். அண்மையில் ‘96’ படத்தின் இரண்டாம் பாகத்தைத்தான் அடுத்து இயக்கவிருந்தார்.
ஆனால், விஜய் சேதுபதியின் கால்ஷீட் கிடைக்கில்லை. அடுத்து விக்ரமை இயக்க திட்டமிட்ட நிலையில், அந்த முயற்சியும் கைகூடவில்லை.
அண்மையில் ஃபகத் ஃபாசிலை சந்தித்தபோது பிரேம்குமார் ஒரு கதையைச் சொல்லியிருக்கிறார். அது ஃபகத்தை வெகுவாகக் கவர்ந்துவிட்டதாம்.
பிறகு அவரிடம், “இது விக்ரமுக்காக எழுதப்பட்ட கதை. அவர் இல்லாததால் உங்களை வைத்து இயக்கப் போகிறேன். அதேசமயம் உங்களுக்கு ஏற்றாற்போல் கதையில் சில மாற்றங்களைச் செய்துகொள்கிறேன்,” என்றாராம் பிரேம்குமார்.
அதற்கு சிரித்துக்கொண்டே ‘ஆகட்டும்’ என்பதாகத் தலை அசைத்துள்ளார் ஃபகத்.

