திரையில் பெரும் செல்வந்தராக, வில்லனாக வலம் வருபவர்கள் நிஜ வாழ்க்கையிலும் அப்படியே இருப்பார்களா என்ன?
மறைந்த இயக்குநரும் நடிகருமான மாரிமுத்து திரையில்தான் வில்லன். ஆனால் நிஜத்தில் நல்ல மனத்துக்குச் சொந்தக்காரர்.
சொந்த வீடு கட்டவேண்டும் என்ற கனவுடன் பல படங்களில் நடித்து வந்தார். மறைவதற்குச் சில மாதங்களுக்கு முன்னரே சொந்த வீட்டைப் பார்த்துப்பார்த்துக் கட்டி வந்தாராம்.
ஆனால் விதி வலியது. அந்த வீட்டைக் கட்டி முடிப்பதற்குள் மாரிமுத்து மறைந்துவிட்டார். இப்போது மாரிமுத்துவின் கனவை அவரது மனைவி, மகன், மகள் மூவரும் நிறைவேற்றியுள்ளனர்.
அண்மையில் புதுமனை புகுவிழாவும் நடந்திருக்கிறது. மாரிமுத்துவின் நட்பு வட்டத்தினர் இதில் நெகிழ்ந்திருக்கிறார்கள்.
“மாரிமுத்து இன்னும் கலையால் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்,” என்று அவரது நண்பர்கள் கூறுகின்றனர்.