குடும்பம், உடல்நலம்: அறிவுரை கூறிய ரஜினி

1 mins read
b4969bc7-05bc-40e0-a473-2008da128e58
ரஜினியுடன் கணேஷ்கர், ஆர்த்தி. - படம்: ஊடகம்

நட்சத்திரத் தம்பதியான ஆர்த்தி, கணேஷ்கரைத் தெரியாத ரசிகர்கள் இருக்க முடியாது.

அண்மையில் இருவரும் நடிகர் ரஜினிகாந்தைச் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர்.

இவர்களின் திருமணத்தின்போது ரஜினிகாந்த் ஊரில் இல்லை. எனினும், முதல் முகூர்த்தப் புடவை, வேட்டியை முன்கூட்டியே வாங்கி அனுப்பிவிட்டார்.

“ஒவ்வொரு ஆண்டும் பிறந்தநாள் அன்று மறக்காமல் அவர் வீட்டுக்குச் சென்று வாழ்த்து பெற்றுவிடுவோம். ஊரில் இல்லையென்றால் தொலைபேசியிலாவது பேசுவோம்.

“இந்த ஆண்டு மே 10ஆம் தேதி அன்று கணேஷ்கரின் பிறந்தநாள். அதனால் நேரில் சந்தித்தபோது 40 நிமிடங்கள் எங்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.

“அப்போது இருவரின் உடல்நலம், பட வாய்ப்புகள் குறித்து விசாரித்தவர், நிறைய அறிவுரைகளையும் கூறினார். குறிப்பாக, சினிமாவைக் கடந்து நிரந்தர வருமானத்துக்கு வேறு ஏதாவது ஏற்பாடு செய்துவைக்க வேண்டும் என்றார்.

“நம் உறவினர்கள்கூட நம் மீது இந்த அளவுக்கு அக்கறை காட்டுவார்களா எனத் தெரியாது. ரஜினி சாரின் அக்கறை அப்படிப்பட்டது. அவரைச் சந்தித்ததே பெரும் பாக்கியம்,” என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார் ஆர்த்தி.

குறிப்புச் சொற்கள்