சஞ்சய் தத்துக்கு ரூ.72 கோடி மதிப்புள்ள சொத்தை எழுதிவைத்த ரசிகை

1 mins read
1356dbb7-23da-45ea-afed-9b17a1c0c7d0
தனது குடும்பத்தினருடன் இந்தி நடிகர் சஞ்சய் தத். - படம்: ஊடகம்

நடிகைகளுக்குக் கோயில் கட்டுவது, நாயகர்களுக்கு ரசிகர் மன்றம் வைப்பது போன்ற செயல்களில் ரசிகர்கள் ஈடுபடுவதைக் கேட்டிருப்போம்.

தனக்குப் பிடித்த நடிகர்களின் படம் வெளியாகும் போது ரசிகர்கள் தங்களுடைய அன்பு மிகுதியில் செய்யும் செயல்களைப் பார்த்து வியந்திருப்போம். அந்த வரிசையில், நடிகர் ஒருவருக்காக ரசிகை 72 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை எழுதி வைத்துவிட்டு உயிர்விட்ட செய்திதான் இணையத்தில் தற்போது பேசுபொருளாகி வருகிறது.

இந்தித் திரையுலகம் மட்டுமல்ல தென்னிந்திய ரசிகர்களிடையேயும் மிகவும் பிரபலமாக இருக்கும் நடிகர் சஞ்சய் தத்துக்குதான் அவருடைய ரசிகர் தனது சொத்தை எழுதிவைத்தார்.

சஞ்சய் தத்தின்மீது தீராத அன்பு கொண்ட அந்த ரசிகை அவரையே திருமணம் செய்து கொள்ள விரும்பியதாகவும் அது நிறைவேறாமல் போகவே தனது சொத்தை அவருக்கு எழுதி வைத்ததாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.

“எனது ரசிகையான நிஷா பட்டேல் எழுதிவைத்த சொத்து எனக்குத் தேவையில்லை. அவருடைய அன்பு மட்டும்போதும். நான் நேரில்கூட கண்டிராத அந்த ரசிகை இறந்து போனது எனக்கு வருத்தம் அளிப்பதாக உள்ளது,” என சஞ்சய் தத் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார். 2018ஆம் ஆண்டு நடந்த இந்தச் சம்பவம் தற்போது இணையத்தில் வெளியாகி பலரையும் வியக்க வைத்திருக்கிறது.

குறிப்புச் சொற்கள்