‘சாவா’ படம் பார்க்க சத்ரபதி சிவாஜியாக வேடமிட்டு குதிரையில் திரையரங்குக்கு ரசிகர் ஒருவர் வந்ததால் திரையரங்கமே விழாக்கோலம் பூண்டது.
மராட்டிய பேரரசர் சத்ரபதி சிவாஜி - சாயிபாய் தம்பதியின் மூத்த மகனான சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம் ‘சாவா’.
இதில் சம்பாஜி மகாராஜாவாக பிரபல பாலிவுட் நடிகர் விக்கி கவுசலும் சம்பாஜியின் மனைவியான மகாராணி ஏசுபாய் கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனாவும் நடித்துள்ளனர்.
ரூ.130 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 14ஆம்தேதி உலகமெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
லக்ஸ்மன் உடேகர் இயக்கியுள்ள இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். மேலும், நடிகர் அக்ஷய் கண்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படம் தற்பொழுது ரூ.326.75 கோடி வசூல் செய்துள்ளது. வர்த்தக ஆய்வாளர் தரண் ஆதர்ஷ் இந்தப் படத்தை ஒரு ‘பாக்ஸ் ஆபிஸ் சுனாமி’ என்று வர்ணித்துள்ளார்.
இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ‘சாவா’ படம் திரையிடப்பட்டபோது, ரசிகர் ஒருவர் சத்ரபதி சிவாஜி வேடத்தில் திரையரங்குக்கு குதிரையில் வந்ததால் திரையரங்கமே விழாக்கோலம் பூண்டது.
இந்நிலையில் இந்தப் படத்தில் ராணியாக நடித்திருக்கும் ராஷ்மிகா மந்தனாவிற்கு பாலிவுட் திரையுலகிலும் தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளது. இந்நிலையில், ராஷ்மிகா மந்தனாவின் பிரம்மாண்டமான வீட்டின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
விஜய் தேவரகொண்டாவை காதலித்து வரும் ராஷ்மிகா, ஹைதராபாத்தில் தங்க முடிவெடுத்து, பெங்களூர் வீட்டை விற்றுவிட்டு, ஹைதராபாத்தில் குடும்பத்துடன் தங்கி இருக்கிறார் ராஷ்மிகா.
இந்நிலையில் அண்மைய நிகழ்ச்சி ஒன்றில் ரஷ்மிகா பேசும்போது தன்னை ஹைதராபாத்தில் இருந்து வந்தவர் என்று குறிப்பிட்டுப் பேசினார்.
அது கன்னட மக்களை கோபப்படுத்தி உள்ளது. எங்கு சென்றாலும் தனது பூர்வீகத்தை ராஷ்மிகா மறக்கக்கூடாது என பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சொந்த ஊரை விட்டு ஹைதராபாத்திற்கு சென்றுவிட்டதால் அவர் அப்படிப் பேசியுள்ளார் என்றும் சிலர் ராஷ்மிகாவிற்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்துள்ளனர்.
தெலுங்கு, இந்தியில் மட்டுமே நடிக்க ரஷ்மிகா ஆர்வம் செலுத்தி வருவதும் கன்னட ரசிகர்களின் கோபத்திற்கு ஒரு காரணம் என்கிறார்கள்.