திரையுலகில் 9 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள ராஷ்மிகா, “நான் இன்று வாழ்வதே உங்களால்தான். என் ஏற்ற இறக்கங்களில் உடனிருந்த ரசிகர்களே என் பலம்,” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். ‘கிரிக் பார்ட்டி’யில் தொடங்கி ‘அனிமல்’ வரை அவரது பயணம் தொடர்கிறது.
இதற்கிடையில், ராஷ்மிகாவுக்கும் நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கும் வரும் பிப்ரவரி 26 அன்று ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் திருமணம் நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் பரவி வருகின்றன. ஏற்கனவே நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாகக் கூறப்படும் நிலையில், இந்தத் தேதியை இருவரும் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.
‘கீதா கோவிந்தம்’, ‘டியர் காம்ரேட்’ ஆகிய படங்களில் இருவரும் இணைந்து நடித்தபோதே இவர்களுக்குள் நட்பு ஏற்பட்டு காதலாக மாறியது குறிப்பிடத்தக்கது. திருமணத்திற்குப் பிறகும் ராஷ்மிகா தொடர்ந்து நடிக்கவிருக்கிறார்.

