யோகிபாபு வெளியிட்ட காணொளியால் ரசிகர்கள் உற்சாகம்

1 mins read
87e9d5e3-80be-4628-955f-e40fa6c6b5cd
அஜித், டோனியுடன் யோகி பாபு. - படம்: ஊடகம்

நடிகர் யோகி பாபு கிரிக்கெட் விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.

அவர் அண்மையில் வெளியிட்ட காணொளி ஒன்று சினிமா, கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

அந்தக் காணொளியில் நடிகர் அஜித், கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி ஆகியோருடன் காணப்படுகிறார் யோகி பாபு.

இதைக்கண்ட பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இரண்டு சாதனையாளர்களுடன் உள்ள யோகி பாபுவும் சாதனை புரிய வாழ்த்துவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தக் காணொளி தற்போது இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

அண்மையில் வெளியான ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடித்திருந்த யோகி பாபு, அடுத்து ரஜினியின் ‘ஜெயிலர் 2’ படத்தில் நடித்து வருகிறார்.

குறிப்புச் சொற்கள்