நடிகை திரிஷா 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஜப்பானுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளாராம். ஜப்பானில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அண்மையில் தமது சமூக ஊடகப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்நிலையில், இன்ஸ்டகிராமில் அவர் வெளியிட்ட பதிவு அவருக்கு நெருக்கமானவர்களை யோசனையில் ஆழ்த்தியுள்ளது.
‘நம்மை மனம் உடையச் செய்தவர்களுடன் நெருங்கிய நட்பு பாராட்டும் ஒருவருடன் நாம் பழகக்கூடாது’ என்பதுதான் திரிஷாவின் பதிவு.
அவர் யாரை இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் என்பது தெரியவில்லை. எனினும், தனது சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பாகத்தான் அவர் இவ்வாறு பதிவிட்டிருக்கக்கூடும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

