ஒரே படத்தில் தமிழ் சினிமா ரசிகர்களுக்குப் பிடித்தமான இளம் நாயகிகளின் பட்டியலில் இணைந்துவிட்டார் கயாது லோஹர்.
என்னதான் அவ்வப்போது அவரைப் பற்றி கிசுகிசுக்களும் புதுத்தகவல்களும் வெளிவந்தாலும்கூட, தன் பங்குக்கு கயாதுவும் ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறார்.
அந்த வகையில், சமூக ஊடகங்களில் ரசிகர்களுக்காக அடிக்கடி தன் புதுப்புது, மலர்ச்சியான புகைப்படங்களைப் பதிவிடுகிறார் கயாது.
மேலும், அடிக்கடி ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலும் சொல்லிப் பரவசப்படுத்துகிறார்.
இந்நிலையில் ரசிகர் ஒருவர், ‘உங்கள் மனம் கவர்ந்த தமிழ் நாயகன் யார்’ என்று கேள்வி எழுப்ப, அதற்கு அடுத்த நிமிடமே ‘விஜய்’ எனக் கயாது பதிலளிக்க, விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாகிவிட்டது.
“தலைவா, கயாதுவுடன் ‘ஜனநாயகன்’ படத்தில் ஒரு குத்தாட்டம் போடுங்கள்,” என்று சமூக ஊடகங்களில் வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள் விஜய் ரசிகர்கள்.