தமன்னாவை அழவைக்கும் ரசிகர்கள்

தமன்னாவை அழவைக்கும் ரசிகர்கள்

படம்: என்டிடிவி

18 Apr 2026 - 3:36 pm

1 mins read

தன்னைப் போன்ற திரைப் பிரபலங்களுக்கு ரசிகர்கள்தான் பெரும் சொத்து என்கிறார் நடிகை தமன்னா.

பாசமுள்ள, ஏராளமான ரசிகர்களைப் பெற்றிருப்பது தமது பாக்கியம் என்றும் அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது தன்னைப் பார்க்க வரும் ரசிகர்கள், உற்சாக மிகுதியில் கண்கலங்குவதும் சிலர் தனது உருவத்தைப் பச்சைக் குத்தியிருப்பதும் தன்னை உணர்ச்சிவசப்படுத்துவதாகக் கூறியுள்ளார் தமன்னா.

“இத்தகைய ரசிகர்களைப் பார்க்கும்போது புல்லரித்துப்போகும். எனக்கும் அழுகை வரும். இவ்வாறு அழவைக்கும் அளவுக்கு ரசிகர்களின் அன்பு இருப்பதை நினைக்கும்போது நான் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன்,” என்று சொல்லும் தமன்னாவுக்கு தற்போது நல்ல பட வாய்ப்புகள் அமையவில்லை.

குறிப்புச் சொற்கள்
தமன்னாதிரைப்படம்அன்பு