நடிகை சமந்தாவின் தந்தை ஜோசப் பிரபு வெள்ளிக்கிழமை காலமானார். இதையடுத்து திரையுலகத்தினர் சமந்தாவுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
இது தொடர்பாக சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள சமந்தா, “மீண்டும் நாம் சந்திக்கும் வரை அப்பா...” என்று தனது சோகத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
விவாகரத்து, நோய் பாதிப்பு ஆகியவற்றை அடுத்து, தந்தையையும் இழந்து பரிதவிக்கிறார் சமந்தா.

