ரஜினியின் பிறந்தநாளன்று இயக்குநரை அறிவிக்கும் நிறுவனம்

1 mins read
71a9609f-23ba-456d-a65f-be466d1953bb
ரஜினி, கமலுடன் இருக்கும் இந்த இரு இயக்குநர்களில் ஒருவர்தான் ரஜினியின் 173வது படத்தை இயக்க இருக்கிறார். - படம்: இந்திய ஊடகம்

கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்க இருக்கும் 173வது படத்தின் இயக்குநர் பெயரை ரஜினியின் பிறந்தநாள் அன்று அறிவிக்க இருக்கிறார்கள்.

‘மகாராஜா’ படத்தை இயக்கிய இயக்குநர் நித்திலனும் ‘பார்க்கிங்’ இயக்குநர் ராம்குமாரும் ரஜினியிடம் கதைகள் கூறியிருக்கிறார்கள். இந்த இருவரில் ஒருவர்தான் இயக்குநராக இருப்பார் என்பது உறுதியாகி இருக்கிறது.

இதன் இயக்குநர் யார் என்பது குறித்த அறிவிப்பினை ரஜினியின் பிறந்தநாளன்று அறிவிக்கலாம் என்று தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.

’ஜெயிலர் 2’ படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் ரஜினி. அதனை முடித்துவிட்டு கமல் தயாரிக்கும் தனது 173வது படத்துக்கு தேதிகள் ஒதுக்கவுள்ளார்.

அதனைத் தொடர்ந்து ரஜினி – கமல் இணைந்து நடிக்கும் படம் தொடங்கும் எனத் தெரிகிறது. இப்படத்தை நெல்சன் இயக்குவது உறுதியாகி இருக்கிறது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாநடிகர்