நடிகை பூஜா ஹெக்டே அண்மையில் கேரளா சென்று ஆயுர்வேத சிகிச்சை பெற்றுள்ளார்.
திருச்சூரில் உடல் பராமரிப்புக்கு என அளிக்கப்படும் இந்த 15 நாள் சிகிச்சையின்போது இயற்கை உணவு, பழரசங்கள், யோகா ஆகியவற்றில் மட்டுமே கவனம் இருக்க வேண்டுமாம். மேலும், கைப்பேசிகள் பயன்படுத்த அறவே அனுமதி இல்லை.
அண்மைக்காலமாக தமிழ், தெலுங்கு திரையுலகப் பிரபலங்கள் கேரளா சென்று ஆயுர்வேத சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நடிகர் விக்ரம், நடிகை பூஜா ஆகியோர் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கேரளா சென்று சிகிச்சை பெற்று புத்துணர்ச்சி யுடன் திரும்புகிறார்கள்.