‘ஜனநாயகன்’ படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ்; ஜூலை 24ல் வெளியீடாக வாய்ப்புள்ளதால் பிற படங்கள் தள்ளிவைப்பு

‘ஜனநாயகன்’ படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ்; ஜூலை 24ல் வெளியீடாக வாய்ப்புள்ளதால் பிற படங்கள் தள்ளிவைப்பு

1 mins read
e0ba0d72-94c1-404f-b005-40f921424fd9
‘ஜனநாயகன்’ படக் காட்சி. - படம்: வியோன் நியூஸ்.காம்

தமிழக முதல்வர் விஜய் நாயகனாக நடித்துள்ள அவரது கடைசி திரைப்படமான ‘ஜனநாயகன்’ படத்திற்குத் தணிக்கை வாரியம் ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது.

படத்தின் அதிகாரபூர்வ வெளியீட்டுத் தேதி இன்னும் தயாரிப்பு நிறுவனத்தால் அறிவிக்கப்படவில்லை என்றாலும், வரும் ஜூலை 24ஆம் தேதி திரையரங்குகளில் படம் வெளியாக உள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.

வெளிநாட்டு விநியோகிப்பாளர்களுக்குப் பட நிறுவனம் இந்த தேதியை வழங்கி உள்ளதை அடுத்து, வெளிநாடுகளில் படத்தைத் திரையிடுவதற்கான முன்பதிவுகளும் இதர ஏற்பாடுகளும் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

கனடாவைச் சேர்ந்த பிரபல விநியோக நிறுவனமான ‘யார்க் சினிமாஸ்’ தனது ‘எக்ஸ்’ சமூக ஊடகப் பக்கத்தில் இந்த வெளியீட்டுத் தேதியை உறுதிப்படுத்தியுள்ளது.

“முதல்வர் விஜய்யின் கடைசிப் படம் என்பதால் ஒட்டுமொத்தத் திரையுலகின் கவனமும் ‘ஜனநாயகன்’ படத்தின்மீதுதான் உள்ளது. இப்படம் வெளியானால் வசூலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், ஜூலை மாத இறுதியில் வெளியாகவிருந்த பெரும்பாலான மற்ற படங்கள் தங்களின் வெளியீட்டுத் தேதியை ஒத்திவைக்கவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன.

“அடுத்த சில மாதங்களில், ஏறக்குறைய இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை எனப் பெரிய செலவிலான படங்கள் வரிசையாக வெளியீட்டுக்குக் காத்திருக்கின்றன.

“இதனால், தற்போது தள்ளிவைக்கப்படும் படங்களுக்குப் புதிய தேதிகளைத் தேர்வு செய்வதில் விநியோகிப்பாளர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் இடையே பெரிய சவால் ஏற்பட்டுள்ளது,” எனத் திரைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்