திரைப்பயணத்தைத் தொடங்கி வைத்த படம்: திரிஷா

திரைப்பயணத்தைத் தொடங்கி வைத்த படம்: திரிஷா

1 of 2
படம்: மாலை மலர்
படம்: சினிமா விகடன்

14 Feb 2026 - 3:32 pm

1 mins read

சூர்யா நடிப்பில் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான படம் ‘மௌனம் பேசியதே’. அதில் நடிகைகள் திரிஷாவும் லைலாவும் நாயகிகளாக நடித்திருந்தனர்.

காதலர் தினத்தை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 13) இப்படத்தை மறுவெளியீடு செய்துள்ளனர். இது தொடர்பாக சூர்யா, லைலா, திரிஷா ஆகிய மூவரும் காணொளி வெளியிட்டனர்.

அதில் திரிஷா கூறுகையில், இந்தப் படம்தான் தன் திரைப்பயணத்தைத் தொடங்கி வைத்தது என்றார்.

“திரையுலகில் என்னுடைய முதல் ஆண்டிலேயே இயக்குநர் அமீருடன் பணியாற்றி வந்தேன். படப்பிடிப்பின்போது என் வீட்டில் இருப்பது போலவே உணர முடிந்தது.

“அன்று என்னுடைய முதல் படத்தின் நாயகன் சூர்யா என்றால் என் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படத்திலும் சூர்யாதான் கதாநாயகன்,” என்று திரிஷா தெரிவித்துள்ளார்.

விரைவில் வெளியீடு காண உள்ள ‘கருப்பு’ படத்தில் இவரும் சூர்யாவும் இணைந்து நடிக்க உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்
திரிஷாநடிகைசூர்யாதிரைப்படம்வெளியீடு