தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சொன்ன நேரத்தில் படத்தை முடிக்க வேண்டும்: சிம்பு

2 mins read
541b8a45-9589-4fdd-b39e-b0682af61ce5
நிகழ்ச்சி ஒன்றில் சந்தானம், சிம்பு. - படம்: ஊடகம்
multi-img1 of 2

சிம்புவின் அண்மைய நேர்காணல் அவரது ரசிகர்களைத் துள்ளாட்டம் போட வைத்திருக்கிறது.

எப்போதும் படப்பிடிப்புக்குத் தாமதமாக வருவார், இயக்குநரைக் கண்டுகொள்ள மாட்டார் என்பன போன்ற குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் ‘நச்’சென்று பதில் அளித்திருக்கிறார்.

அவரது பேட்டியுடன் கூடிய காணொளி தற்போது இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தக் லைஃப்’ படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கத்துடன் சிம்புவை பேட்டி கண்டுள்ளனர்.

சிம்புவிடம் பலரும் மணிரத்னம் இயக்கும் படத்திற்கு மட்டும் படப்பிடிப்பு தளத்துக்கு சீக்கிரமாக வந்துவிடுகிறீர்களே என்றும் இயக்குநர் மீது அவ்வளவு பயமா என்றும் கேட்கிறார்களாம்.

“சத்தியமாக, அவர் மீது எனக்கு எந்தவிதமான பயமும் கிடையாது. அவரை எனக்கு மிகவும் பிடிக்கும்.

“நான் ஒரு நாள்கூட மணிரத்னம் படத்தின் படப்பிடிப்புக்கு தாமதமாகச் சென்றது கிடையாது. சில நேரங்களில் அவர் வருவதற்கு முன்பேகூட நான் சென்றிருக்கிறேன்.

“நான் ஒரு நடிகர். தயாரிப்பாளரையோ, இயக்குநரையோ நம்பி ஒரு படத்திற்குள் நடிக்கச் செல்லும்போது முதலில் சொன்ன நேரத்தில் படத்தை எடுக்க வேண்டும் என எதிர்பார்ப்பேன்.

“முதலில் இயக்குநர் நேரத்திற்கு படப்பிடிப்புத் தளத்திற்கு வரவேண்டும்.

அப்படி வந்தால்தான் மற்ற நடிகர்களும் சரியான நேரத்திற்குப் படப்பிடிப்புத் தளத்திற்கு வருவார்கள்,” எனப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் சிம்பு.

மணிரத்னத்தைப் பொறுத்தவரை கதையைச் சொன்ன பிறகு படப்பிடிப்புத் தளத்தில் ‘இதை இப்படி செய்யலாமா? அதை அப்படி செய்யலாமா’ என யோசிக்கவே மாட்டாராம்.

ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பில் என்னென்ன காட்சிகள் எடுக்கப்பட வேண்டுமோ, அவற்றை முன்கூட்டியே திட்டமிட்டுவிடுவார் என்றும், சொன்ன நேரத்திற்குள் படத்தை முடித்துவிடுவார் என்றும் பாராட்டுகிறார் சிம்பு.

“நமக்குப் பேசப்பட்ட ஊதியமும் சரியாக வந்துவிடும். படமும் சொன்ன தேதியில் வெளியாகும். இவ்வளவு விஷயங்களையும் அவர் இத்தனை ஆண்டுகளாக தவறாமல் பின்பற்றும்போது எந்த நடிகர் அவருடைய படப்பிடிப்புத் தளத்திற்கு தாமதமாக வருவார்?” என்று கேட்டுள்ளார் சிம்பு.

‘நாயகன்’ படத்திற்குப் பிறகு கமலும் மணிரத்னமும் இணைந்திருக்கும் திரைப்படம் ‘தக் லைஃப்’.

சிம்பு, திரிஷா, அசோக் செல்வன், அபிராமி, ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஜோஜு ஜார்ஜ் ஆகியோரும் இப்படத்தில் இடம்பெற்றுள்ள முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

ஜூன் 5ஆம் தேதி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

குறிப்புச் சொற்கள்