திரைப்பட நட்சத்திரங்கள் இந்தத் தலைமுறையில் உஷாராக இருக்கிறார்கள். அதனால் மிகப் பொறுப்பாக, லாபகரமான தொழில்களில் முதலீடு செய்கிறார்கள்.
பெரும்பாலும் உணவுத்தொழில் மற்றும் நில வர்த்தகத்தில் (Real Estate) முதலீடு செய்கிறார்கள்.
நட்சத்திரங்களின் தொழில் முதலீடுகளைப் பற்றி பார்ப்போம்.
அமலாபால்:
நடிகை அமலாபால் தன் தம்பி அபிஜித் பாலுடன் இணைந்து கேரள மாநிலம் கொச்சியில் ‘அய்யம் யோகா ஸ்டுடியோ’ எனும் யோகா பயிற்சியை நடத்தி வருகிறார்.
சென்னையில் ‘வீகன் ரெஸ்டாரென்ட்ஸ்’ எனும் சங்கிலித்தொடர் நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கிறார் அமலா.
இந்த சைவ உணவகத்தின் சிறப்பு, புகை மற்றும் எண்ணெய் இல்லாமல் தயாரிக்கப்படும் உணவுகள்.
டாப்சி
நடிகை டாப்சி தன் தங்கை ஷாகுன், தோழியுடன் இணைந்து சில நிறுவனங்களை நடத்தி வருகிறார்.
பொண்ணும் மாப்பிள்ளையும் வந்தால் போதும். திருமணம் சார்ந்த மற்ற அனைத்து வேலைகளையும் இவரது நிறுவனம் கவனித்துக் கொள்ளும்.
தொடர்புடைய செய்திகள்
இந்நிறுவனத்திற்கு ‘தி வெட்டிங் ஃபேக்டரி’ என்பது பெயர்.
‘புனே 7 ஏக்கர்ஸ்’ எனும் பிரிமியர் பேட்மிண்டன் லீக் அணியையும் வாங்கி நடத்துகிறார். ‘அவுட்சைடர்ஸ் ஃபிலிம்ஸ்’ என்ற பெயரில் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார் டாப்சி.
கீர்த்தி சுரேஷ்
தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகம் ஆகிய தென்னிந்திய மாநிலங்களில் நிலங்களை வாங்கியுள்ளார் கீர்த்தி சுரேஷ்.
எதிர்காலத்தில் வேளாண் பண்ணைகளை உருவாக்கி, இயற்கை விவசாயம் மூலம் வேளாண் பொருள்களை உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளாராம்.
சமந்தா
நடிகை சமந்தா பல்வேறு தொழில்களில் முதலீடு செய்துள்ளார். ‘ஹெல்த் அண்ட் அரோமா தெரெபி’ எனப்படும் ஆரோக்கியம் மற்றும் நறுமண சிகிச்சை நிறுவனமான ‘சீக்ரெட் அல்கெமிஸ்’ நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். ‘சாக்கி’ எனும் பெயரில் இணைய ‘ஃபேஷன் பிராண்ட்’ நிறுவனத்தையும் சமந்தா நடத்தி வருகிறார். ஹைதராபாத்தில் உள்ள விவசாய உற்பத்தி நிறுவனத்திலும் முதலீடு செய்துள்ளாராம்.
திரிஷா
திரிஷா அடுக்குமாடி குடியிருப்புகளில் முதலீடு செய்கிறார். சென்னை புறநகரில் அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கி, நல்ல விலை கிடைக்கும்போது விற்றுவிடுகிறார். திரிஷாவின் அப்பா கிருஷ்ணன் பிரபல நட்சத்திர உணவகங்களில் மேலாளராகப் பணியாற்றியவர். அதனால் தன் தந்தைக்கு ஹைதராபாத்தில் நட்சத்திர தங்குவிடுதி கட்ட விரும்பினார். ஆனால், அப்பாவின் எதிர்பாராத மரணத்தால் அந்தத் திட்டத்தைக் கைவிட்டார் என்றாலும் எதிர்காலத்தில் உணவகம் கட்டும் ‘ஐடியா’ உள்ளது. பெங்களூருவில் ‘ஸ்மாலீஸ் ரெஸ்டோ கேஃப்’ எனும் காஃபி கடையுடன் கூடிய உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார் நிக்கி கல்ராணி.
[ο] ‘ஒயிட் அண்ட் கோல்ட்’ எனும் இணைய வர்த்தக நகை விற்பனை நிறுவனத்தை நடத்தி வருகிறார் தமன்னா.
[ο]தன் கணவருடன் இணைந்து, மும்பையில் ‘மார்ஷல் ஜூவல்லரி’ எனும் நகைக் கடை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளார் காஜல் அகர்வால்.
அனிருத்
இசையமைப்பாளரும் பாடகரும் மாடலிங் நடிகருமான அனிருத், சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியில், ‘தி சம்மர் ஹவுஸ் ஈட்டரி’ எனும் உயர் ரக உணவகத்தை நடத்தி வருகிறார்.
சூர்யா
காற்றாலை மின் உற்பத்தியில் முதலீடு செய்திருக்கும் சூர்யா, ‘2டி எண்டர்டெயின்மென்ட்’ எனும் படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். அத்துடன், வெளிநாட்டு நண்பர்களின் பங்களிப்புடன் ‘ஹீரோ டாக்கீஸ்’ நிறுவனத்திலும் முதலீடு செய்திருக்கிறார். இது வெளிநாடுகளில் திரைப்பட வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனம். சினிமாவுக்கு வரும் முன் ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய சூர்யாவுக்கு, ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனம் ஒன்றைத் தொடங்கும் விருப்பமும் உள்ளது.
[ο] நடிகர் ஜீவா ‘ஒன் எம்பி’ எனும் சாட் மசாலா மற்றும் சைனீஸ் உணவுகளை விநியோகிக்கும் உணவு விடுதியை நடத்தி வருகிறார்.
[ο]‘ராஜ்கமல் ஃபிலிம்ஸ்’ என்ற பெயரில் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தில் பெருமளவு முதலீடு செய்கிறார் கமல். தமிழகத்திலும் கர்நாடகாவிலும் நிலங்களை வாங்கி முதலீடு செய்கிறார் ரஜினி.
[ο] ரியல் எஸ்டேட் மற்றும் கல்வி நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார் விஜய். அஜித், ரியல் எஸ்டேட், வெளிநாட்டு முதலீடுகளைச் செய்துள்ளார்.