நடிகர் அஜித் குமார், திரைப்படங்களைத் தாண்டி பன்னாட்டு கார் பந்தயங்களில் ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். துபாயில் நடைபெறும் பந்தயக் களத்தில் அவரைப் பல திரைத்துறையினர் நேரில் சந்தித்து வருகின்றனர்.
ஏற்கெனவே இசையமைப்பாளர் அனிருத், அஜித்தைச் சந்தித்துப் பேசிய நிலையில், தற்போது விக்னேஷ் சிவன் - நயன்தாரா, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், நடிகர் சிபிராஜ் ஆகியோரும் அவரை நேரில் சந்தித்துள்ளனர்.
அஜித்தின் இந்தப் பந்தயப் பயணத்தை மையப்படுத்தி இயக்குநர் ஏ.எல்.விஜய் உருவாக்கும் ஆவணப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

