நடுத்தர மக்களின் வாழ்வியலையும் அவலங்களையும் பேசும் படம்

நடுத்தர மக்களின் வாழ்வியலையும் அவலங்களையும் பேசும் படம்

படம்: இந்து தமிழ் திசை

21 Nov 2026 - 5:12 pm

1 mins read

நவீன காலத்தின் சாபக்கேடாகவும் நடுத்தர மக்களின் வாழ்க்கையைச் சூறையாடும் இணையவழி கடன் செயலிகளின் கோர முகத்தை மையமாகவும் வைத்து உருவாகியுள்ள புதிய தமிழ் திரைப்படம் ‘பத்துநாள் ராஜா’.

இப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்து விரைவில் திரைக்கு வரவுள்ளது.

இதுவரை நகைச்சுவைக் கதாபாத்திரங்கள் மூலம் ரசிகர்களைச் சிரிக்கவைத்த நடிகர் சதீஷ், இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடுத்தர வயது இளையராகக் கச்சிதமாகப் பொருந்தி நடித்துள்ளார்.

தெலுங்குத் திரையுலகின் பிரபல நடிகர் சாய்​குமாரின் மகனும் முன்னணி நடிகருமான ஆதி சாய்குமார் இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.

மேலும், ஆதியா பிரசாத், சரண்யா ராமச்சந்திரன், கருடா ராம், ஆடுகளம் நரேன், பருத்திவீரன் சரவணன் எனப் பல நட்சத்திரங்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் வலம் வருகின்றனர்.

எஸ்ஜிஎஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ஜி.சுரேஷ் தயாரிக்க, குரு சரவணன் இப்படத்தை இயக்கியுள்ளார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

ஒவ்வொரு நடுத்தரக் குடும்பமும் இன்று சந்திக்கும் சிக்கல்களை உண்மைச் சம்பவங்களுடன் இப்படம் பேசுவதாகவும் கடன் செயலியில் சிக்கி மக்கள் படும் இன்னல்களைத் தழுவி இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாகவும் சொல்கிறார் இயக்குநர் குரு சரவணன்.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம், தெலுங்கில் ‘ஈகோ ராஜா’ என்ற தலைப்பில் வெளியீடு காண உள்ளது.

நடுத்தர மக்களின் வாழ்வியலையும் அவலங்களையும் பேசும் படமாக உருவாகி உள்ளது ‘பத்துநாள் ராஜா’.

குறிப்புச் சொற்கள்
நடிகர்தெலுங்குதிரைப்படம்இயக்குநர்