‘மரகத நாணயம் 2’ படப்பிடிப்பு தொடங்கியது

‘மரகத நாணயம் 2’ படப்பிடிப்பு தொடங்கியது

1 mins read
247aab50-f8f1-4def-a50d-b6ba35ac30db
படப்பூசையில் நடிகர் கார்த்தி, இயக்குநர் வெங்கட் பிரபு, ஆர்யா, வைபவ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். - படம்: மரகத நாணயம் படக்குழு

ஆதி நடிக்கும் ‘மரகத நாணயம் 2’ படத்தின் படப்பிடிப்பு பூசையுடன் சென்னையில் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 17) தொடங்கியது.

2017ஆம் ஆண்டு வெளியாகி பெருவரவேற்பைப் பெற்ற படம் ‘மரகத நாணயம்’.

முதல் பாகத்தின் காட்சிகள், நகைச்சுவை வசனங்கள் என அனைத்துமே மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அண்மையில், அதன் இரண்டாம் பாகம் குறித்த தகவல் அறிவிக்கப்பட்டது.

முதல் பாகத்தில் நடித்த நடிகர்களுடன் வேறு பலரும் இரண்டாம் பாகத்தில் இணைந்திருக்கிறார்கள்.

ஏ.ஆர்.கே சரவணன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் ஆதி, நிக்கி கல்ராணி, பிரியா பவானி சங்கர், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைக்கவுள்ளார்.

படப்பூசையில் நடிகர் கார்த்தி, இயக்குநர் வெங்கட் பிரபு, ஆர்யா, வைபவ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்