சூரி 07 படப்பிடிப்பு அதிகாரபூர்வமாகத் தொடங்கியுள்ளது.
சிவகார்த்திகேயன் படப்பிடிப்பைத் தொடக்கி வைத்தார்.
சூரியின் வளர்ச்சி அபாரமாக இருப்பதாகவும் அது தன் தோள்களில் ஒரு பெரிய பொறுப்பை சுமத்துவதாகவும் அப்படத்தின் இயக்குநர் கூறியுள்ளார்.
‘இன்று நேற்று நாளை’ புகழ் ரவிக்குமார்தான் அந்த இயக்குநர்.
சூரி, ரஜிஷா விஜயன் நடிக்கும் இப்படத்திற்கான பூஜை புதன்கிழமை (அக்டோபர் 14) நடைபெற்றது.
தற்காலிகமாக இப்படத்திற்கு ‘சூரி 07’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. இந்நிறுவனம் ‘குட் பேட் அக்லி’, ‘டூட்’, அண்மைய வெற்றிப் படமான ‘மொத ராத்திரி’ போன்ற படங்களைத் தயாரித்துள்ளது.
தமிழ், தெலுங்கில் வெளியாகும் ‘சூரி 07’ படத்தின் மற்ற நடிகர்கள், படக்குழுவினர் பற்றி இன்னமும் அறிவிக்கப்படவில்லை.
‘விடுதலை 1’, ‘விடுதலை 2’, ‘கருடன்’, ‘கொட்டுக்காளி’, ‘மாமன்’, ‘மண்டாடி’ ஆகிய படங்களுக்குப் பிறகு சூரி நடிக்கும் ஏழாவது படம் இது. அண்மையில் இவர், ராம் இயக்கிய ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
