தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பெண்களை மையமாக வைத்துவரும் படங்கள் வெற்றியடைவது அரிது: குஷ்பூ

1 mins read
f1111ad0-9ae5-48ff-834a-6b6e1a55f1b2
கணவர் சுந்தர் சியுடன் குஷ்பூ. - படம்: இன்ஸ்டகிராம்

நடிகை குஷ்பூ அண்மையில் அளித்த நேர்காணல் ஒன்றில் திரையுலகம் குறித்த சில தகவல்களைப் பகிர்ந்திருந்தார்.

அதில், பெண்களை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்கள் வெற்றியடைவது அரிது என குஷ்பூ கூறினார்.

மேலும், “நான் என் வார்த்தைகளைத் திரும்பப் பெறப்போவதில்லை. தற்போது காலம் மாறிவிட்டது என்றும் சொல்லப் போவதில்லை. உண்மைகளை ஒத்துக்கொண்டுதான் ஆகவேண்டும்,” என்றார் அவர்.

“பெண்களை மையமாகக் கொண்ட ‘அரண்மனை 4’, ‘மூக்குத்தி அம்மன் 2’ போன்ற படங்கள் எப்போதாவதுதான் வரும். இப்போதும் சூப்பர் ஸ்டார்கள், உலக நாயகன் ஆகியோருக்குத்தான் திரையரங்குகள் வரவேற்பு அளிக்கின்றன. அனைவரது படங்களும் திரையரங்குகளில் வெளியாக காலம் இன்னும் கனியவில்லை,” என்று அந்த நேர்காணலில் அவர் கூறினார்.

தொடர்ந்து ஓடிடி தளம் குறித்து பேசிய அவர், “ஓடிடி தளம் பெண்களுக்கு அதிக வாய்ப்பு அளிக்கிறது. இந்தி நடிகை டிம்பிள் கபாடியா போன்றோரை அதில் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. பெரிய திரையில் செய்ய முடியாதவற்றை ஓடிடியில் பெண்கள் செய்கின்றனர்,” எனச் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்