தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஒருவழியாக ஷாருக் கானுக்கு தேசிய விருது

2 mins read
824eb1b5-210a-4f58-b654-cee732c6b3e6
ஷாருக்கானுக்கு முதல் முறையாக தேசிய விருது கிடைத்துள்ளது. - கோப்புப் படம்: ஊடகம்

பாலிவுட் நட்சத்திரமான ஷாருக் கான் இந்தியாவையும் தாண்டி உலக அளவில் பிரபலமாக இருந்தாலும் தேசிய விருது அவருக்கு எட்டாக்கனியாகவே இருந்து வந்துள்ளது.

தற்போது ஒருவழியாக அவருக்கு தேசிய விருது கிடைத்துள்ளது.

ஒவ்வேர் ஆண்டும் சிறந்த நடிகர், நடிகை, படம், இயக்குநர், இசையமைப்பாளர், திரைக்கதை, ஒளிப்பதிவாளர் என சினிமாத் துறையைச் சேர்ந்த அனைவருக்கும் இந்திய அரசாங்கம் விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது.

அந்த வகையில் 2023ஆம் ஆண்டுக்கான (71வது) தேசிய திரைப்பட விருதுகள் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 1) அறிவிக்கப்பட்டன.

அதில் அட்லீ இயக்கிய ஜவான் படத்தில் சிறந்த நடிகருக்கான விருது ஷாருக் கானுக்கு வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஷாருக் கான் தமது 33 ஆண்டுத் திரைப்பட வாழ்க்கையில் முதல் முறையாக தேசிய விருது பெற்றுள்ளார்.

ஜவான் படத்தில் வாய்ப்புக் கொடுத்த அட்லீக்கு நன்றி என கூறி ஷாருக் காணொளி ஒன்றை சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.

“என்னை நம்பி இந்த வாய்ப்புக் கொடுத்த அட்லீ மற்றும் அவர் குழுவுக்கு நன்றி,” என அவர் காணொளியில் குறிப்பிட்டுள்ளார்.

“தேசிய விருது என்னைத் தொடர்ந்து முன்னேறவும் கடினமாக உழைக்கவும் ஊக்குவிக்கிறது.

“திரையுலகில் 33 ஆண்டுகளாக உள்ள நிலையில் நன்றி, பெருமிதம், பணிவுடன் தேசிய விருதை ஏற்றுக்கொள்கிறேன்,” என்று ஷாருக் கான் தெரிவித்துள்ளார்.

சிறந்த படத்துக்கான தேசிய விருது ‘12த் ஃபெயில்’ படத்துக்கும், அதில் நடித்த விக்ராந்த் மாசிக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் அறிவிக்கப்பட்டுள்ளன.

சிறந்த இயக்குநர், சிறந்த ஒளிப்பதிவு ஆகிய பிரிவுகளில் மலையாளப் படமான ‘தி கேரளா ஸ்டோரி’ தேசிய விருதுகளைப் பெற்றுள்ளது.

சிறந்த இயக்குநராக சுதிப்தோ சென் (கேரளா ஸ்டோரி) தேர்வாகியுள்ளார்.

சிறந்த நடிகைக்கான விருது ‘Mrs. Chatterjee vs Norway’ படத்தில் நடித்த ராணி முகர்ஜிக்கு வழங்கப்பட்டுள்ளது.

பாடல்களுக்கான சிறந்த இசையமைப்பாளர் விருது ஜி வி பிரகாஷ் குமாருக்கும் (வாத்தி), பின்னணி இசைக்கான சிறந்த இசையமைப்பாளர் விருது ஹர்ஷவர்தன் ரமேஷ்வருக்கும் (அனிமல்: இந்திப்படம்) வழங்கப்பட்டுள்ளது. சிறந்த பின்னணிப் பாடகியாக ஷில்பா ராவ் (ஜவான்) தேர்வாகியுள்ளார்.

சிறந்த பின்னணிப் பாடகர் விருதை பிவிஎன் எஸ் ரோகித் (பேபி-தெலுங்கு) வென்றுள்ளார். சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது பிரசாந்தனு மொகபத்ராவுக்கு (கேரளா ஸ்டோரி) வழங்கப்படுகிறது.

இதில் தமிழ்த் திரைப்படங்களைப் பொறுத்தவரை ஒரே படத்திற்கு மூன்று விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன

அறிமுக இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், எம்.எஸ்.பாஸ்கர் நடிப்பில் 2023ஆம் ஆண்டில் வெளியான திரைப்படம் ‘பார்க்கிங்’. இந்த படத்திற்கு 3 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன.

சிறந்த படம், சிறந்த திரைக்கதை ஆசிரியர் மற்றும் நடிகர் எம்.எஸ்.பாஸ்கருக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தலா ரூ.2 லட்சம் ரொக்கப் பரிசுடன் வெள்ளித்தாமரை விருது கிடைக்கும்.

அதிபர் பின்னர் நடைபெறும் விழாவில் திரைப்படக் கலைஞர்களுக்கு விருதுகளை வழங்குவார்.

ராணி முகர்ஜி
ராணி முகர்ஜி - கோப்புப் படம்: ஊடகம்
எம்.எஸ். பாஸ்கர்
எம்.எஸ். பாஸ்கர் - கோப்புப் படம்: ஊடகம்
ஜி வி. பிரகாஷ்
ஜி வி. பிரகாஷ் - கோப்புப் படம்: ஊடகம்
குறிப்புச் சொற்கள்